ஹாலிவுட் படத்தினைபோல மனைவியை கொடூரமாக கொலைசெய்த கணவன்

ஹாலிவுட் படத்தின் திகில் கொலை காட்சிகளை பார்த்து ,அதற்காக யூடியூப் வீடியோ மூலம் ௧ மாதம் பயிற்சி எடுத்து கர்ப்பிணி மனைவியின் வாயை கட்டி சகதியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் புஷ்பா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.தோட்டத்துக்கு குளிக்கச்சென்ற புஷ்பா சகதியில் மூழ்கி பிணமாக மீட்கப்பட்டார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

ராமதாசுக்கும் புஷ்பாவுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மனைவியின் நடத்தையில் ராமதாசுக்கு எப்போதும் சந்தேக பார்வை இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் புஷ்பா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்ததால் , வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகம் முற்றியது. இதனால் அவருடன் தினமும், சண்டையிட்டு வந்துள்ளார் ராமதாஸ்.

ஒரு கட்டத்தில் தனது மனைவியை கொலை செய்யும் கொடூர திட்டம் ராமதாசின் மனதில் தோன்றி உள்ளது. இதையடுத்து யூடியூப்பில் தவறு செய்யும் பெண்களை கொலைசெய்யும் முறைகள் தொடர்பான வீடியோக்களையும், கொலை செய்து விட்டு எளிதில் தப்பிப்பது எப்படி ?

என்பது தொடர்பான வீடியோக்களையும் கொலை செய்தால் இந்தியாவில் என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றது போன்ற வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்து கடந்த ஒரு மாதமாக தினமும் பார்த்து வந்துள்ளார்.

குறிப்பாக ஹாலிவுட் பட காட்சிகளில் வரும் வினோத தண்டனை குறித்த வீடியோக்களை அதிகம் பார்த்துள்ளார். அதில் பெண்களின் வாயை இறுக்க பூட்டி கொடூரமாக கொலை செய்யும் முறைகளை பார்த்து அது போல ஒரு மாதமாக பயிற்சி எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி தோட்டத்திற்கு குளிக்க சென்றுள்ளார் புஷ்பா. அவர் குளித்துக்கொண்டிருந்த போது அங்கு சென்ற ராமதாஸ், புஷ்பாவின் முகத்தை துணியால் இறுக்கி கட்டி , தலையை கரும்பு தோட்ட சகதியில் வைத்து அழுத்தி அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பின் அதை கொள்ளையர்கள் கைவரிசையாக மாற்ற புஷ்பாவின் செயின் மற்றும் கம்மலை கழற்றி தோட்டத்துக்குள் வீசி எறிந்துவிட்டு. ஒன்றும் தெரியாதவர் போல வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. மாலையில் அவரே தனது மனைவியை காணவில்லை என்று ஊராரிடம் தெரிவிக்க , கரும்பு தோட்டத்தில் சடலமாக கிடந்த புஷ்பாவை தடயங்களை அழிக்கும் பொருட்டு சடலத்தை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளான் ராமதாஸ்.

கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றவரின் சட்டை மற்றும் வேட்டியில் சகதி படிந்திருந்ததையும் அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில் இணையதள தேடல்கள் மற்றும் முகநூலில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதையும் ஆதாரமாக கொண்டு இந்த வழக்கில் குற்றவாளி ராமதாஸ் தான் என்று கூறுகிறார் காவல் கண்காணிப்பாளர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]