ஹாலிவுட் சினிமா, உலக புகழ் நடிகர் மீது பாலியல் புகார்!

ஹாலிவுட் சினிமா, உலக புகழ் நடிகர் மீது பாலியல் புகார்!

ஹாலிவுட் சினிமாவில் பல ஆக்‌ஷன், அதிரடி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சில்வர் ஸ்டர் ஸ்டோலன். தற்போது இவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

இதில் அப்பெண் தனக்கு 16 வயது இருந்தபோது 1986 ல் ஸ்டோலனும், அவரது பாதுகாவலரும் சேர்ந்து தன்னுடன் பாலுறவு வைத்ததாகவும், அவமானம் கருதி அப்போது அமைதியாக இருந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்

பல வருடங்களுக்கு பிறகு தற்போது அப்பெண் நடந்த உண்மையை கூறியுள்ளார். இதில் அவர் என்னை என் உறவினர் ஸ்டோலனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அந்த நபர் ஸ்டோலனுக்கு மகனாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு ஹோட்டலில் நடந்துள்ளது. அப்பெண் தன் உறவினர்களுடன் விடுமுறை கொண்டாட சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது என அப்பெண் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]