ஹலெப்பிடம் தோற்று வெளியேறினார் ஷரபோவா

சீனப் பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று இடம்பெற்ற இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட, ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மரியா ஷரபோவா, 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான, லத்தீவியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 6-3, 7-5 என்ற நேர் செட்களில், அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோஸரை வென்று, இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டிக்குச் சென்றார்.