முகப்பு News Local News ஹற்றன் ஆற்றுப்பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

ஹற்றன் ஆற்றுப்பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

ஹற்றன் ஆற்றுப்பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹற்றன் – ரொத்தஸ் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நான்கு வயது குழந்தையின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை நேற்று மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில், குழந்தையை தேடிச் சென்ற உறவினர்கள், ஆற்றினருகே குழந்தையின் காலணி இருப்பதை அவதானித்துள்ளனர்.

அதற்கமைய ஆற்றில் இறங்கி தேடியபோது 100 மீற்றர் தூரம்வரை அடித்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள ஆற்றில் தவறி விழுந்ததில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றிருப்பதாக கூடும் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com