முகப்பு News Local News ஹற்றனில் மண்சரிவு அபாயம்: 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹற்றனில் மண்சரிவு அபாயம்: 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

ஹற்றனில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் 23 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்துள்ள 61 பேரும் ஹற்றன், புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவுகின்றமையினால் இப்பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மலை பகுதியில், பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு மண்சரிவு அபாயம் தோன்றியதனையடுத்து இந்த குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்கவும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com