ஹெரோயின் விற்பனை இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்நகரில் 720 மில்லிகிராம் ஹரோயின் போதைப் பொருளுடன் கைப்பற்றப்பட்டுன் சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உட்பட நான்கு பேரை ஞாயிற்றுக்கிழமை (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹெரோயின் வைத்திருத்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரும் விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 720 மில்லிகிராம் ஹரொயிக் போதைப்பொருன் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து கடந்த நான்கு மாதங்களாக ஹரோயின் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகறிது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாயப்புப் பிரிவுக்கு கிடைத்த அரகசிய தகவலொன்றினையடுத்து பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்.புருசோத்மன் ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.பி.ஸ்.நிறோசன் பெனர்ன்டோ பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதி மன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]