ஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

ஹரிஷ் கல்யாணுடைய அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

பிக்போஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அவர், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ரைஸாவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் அடுத்த படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இந்த படத்திற்கு ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை மாதவ் மீடியா தயாரித்து வருகிறது.

சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]