ஹய் ஹீல்ஸ் அணிந்து சென்றதால் ஆறு மாத குழந்தை பரிதாப பலி!!

உயரமான குதியை கொண்ட செருப்பை அணிந்து 6 மாத குழந்தையை தூக்கி சென்ற தாய் கீழே விழுந்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது .

ஃபெமிடா எனும் பெண் , தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.