ஹம்பாந்தோட்டை சீனாவின் ராணுவத்தளமாக விரைவில் மாறும் – மைக் பென்ஸ்

ஹம்பாந்தோட்டை சீனாவின் ராணுவத்தளமாக விரைவில் மாறும் – மைக் பென்ஸ்

பீஜிங்கின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க தளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம், விரைவில் மாற்றமடையுமென அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை சீனா தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தி ஹம்பாந்தோட்டையை கைப்பற்ற சீனா முழு வீச்சில் செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அமெரிக்காவின் உயர்மட்ட சிந்தனைக் குழாமான, ஹட்சன் நிறுவகத்தில், வெளிவிவகாரக் கொள்கை தொடர்பாக வியாழக்கிழமை நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவைப் பற்றிக் கேளுங்கள், வணிப் பெறுமானம் பற்றிய சந்தேகம் உள்ள துறைமுகத்தை அமைப்பதற்காக, சீன அரசு நிறுவனங்களிடம் இருந்து பாரிய கடனைப் பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், துறைமுகத்தை சீனாவிடம் வழங்கும்படி, சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுத்தது.

சீனாவின் வளர்ந்து வரும் நீல நீர் கடற்படையின் முன்னரங்க இராணுவத் தளமாக, ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில் மாறக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]