ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் இரண்டு மீனவர்கள் மீட்பு

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் வைத்து காணாமல்போன இரண்டு மீனவர்கள் காப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி தங்காலை கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற குறித்த இரண்டு மீனவர்களும் காணாமல் போயிருந்தனர்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் வைத்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள மீனவர்கள் மருத்துவ பரசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]