‘ஹம்பாந்தோட்டை’யில் சீன தேசியக்கொடி

ஹம்பாந்தோட்டை, மாகம்புற துறைமுகத்தில் சீனா நாட்டின் தேசியக் கொடி இன்று ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி சீனாவின் மார்சன்ட் போட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை அடிப்படையில் குறித்த துறைமுகம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவின் தேசியக் கொடி முதன்முறையாக அங்கு ஏற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அங்கு இலங்கை தேசியக்கொடி மற்றும் துறைமுக அதிகாரசபையின் கொடி என்பன ஏற்றப்பட்டிருந்ததுடன், ஏனைய கொடிகளை விட ஒன்றரை அடி உயரத்தில் இலங்கை தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.

எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையின் கொடியின் உயரம் குறைக்கப்பட்டு ஏனைய கொடிகளின் உயரத்துக்கு சமனாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]