தீவிரவாத குழுவின் தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்வு

பாலத்தீன தீவிரவாத குழுவான ஹமாஸ் அதன் ஒட்டுமொத்த குழுவின் புதிய தலைவராக இஸ்மாயில் ஹனியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஹமாஸ் இயக்கம்

கலீத் மெஷல் என்பவர் இதற்கு முன்பு அதிகபட்சமாக இரண்டு தடவைகள் அந்த பதவியில் இருந்தார்.

54 வயதாகும் ஹனியா காஸாவில் வாழ்ந்து வருகிறார். 2007 ஆம் ஆண்டிலிருந்து அந்நகரம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், மெஷால் கத்தாரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடைமுறைவாத தலைவராக பார்க்கப்படும் ஹனியா ஹமாஸ் இயக்கம் மீது சர்வதேச அளவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையை சுமூகமாக்க முயல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் இயக்கம் மீதான பிம்பத்தை மென்மையாக்க இந்த வாரம் ஹமாஸ் குழு புதிய கொள்கை ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]