ஹப்புத்தளை இளைஞன் சிறைக்கூடத்தில் தற்கொலை

ஹப்புத்தளை இளைஞன்

ஹப்புத்தளை இளைஞன் சிறைக்கூடத்தில் தற்கொலை

கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டபோது கடமையில் இருந்த அதிகாரிகள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இன்று அதிகாலை இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பகுதியில் வைத்து குறித்த இளைஞன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]