ஹப்புத்தளையில் பாரிய மண்சரிவு!

ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வல்லப்புதென்ன வழியாக கிரிமிட்டிய செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கினிகந்கல, கிரிமிட்டிய மற்றும் களுப்பான ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழி தடைப்பட்டுள்ளது.

கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 360 குடும்பங்களின் போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் நேற்றும் இன்றும் மண் சரிவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மண் சரிவு மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]