ஹபாயா அணிவதற்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!

பாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவிமார் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி இன்று (25) திருகோணமலை சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

சிறி சன்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபரின் பேச்சை அவமதித்து இவர்கள் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு வருவது ஒட்டுமொத்த நிர்வாகத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்று புதன் கிழமை காலை 7.00மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 10 .00மணிவரை தொடர்ந்ததுடன் சிறந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லையெனவும் குறிப்பிட்டனர்.