ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் கோரா மரணம்

ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் கோரா மரணம்

ஹட்டன் பொலிஸ் வலயத்தின் மோப்பநாய் பிரிவில் கடந்த மூன்றுவருடங்களாக சேவையாற்றிவந்த “கோரா” என்றழைக்கப்படும் மோப்பநாய், இன்று (29) காலை இறந்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எட்டு வயதுடைய கோரா, கடந்த முன்று வருடங்களாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் சேவை புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் பொலிஸ்

சிவனொளி பாதமலை பருவகாலத்தில், போதைப்பொருட்களுடன் மலைக்குச் செல்வோரை இனங்கண்டு, அவர்களைக் கைதுசெய்வதற்கு, கோரா பலவகையிலும் உதவியுள்ளது.

மத்திய மாகாணத்தில், பொலிஸ் மோப்பநாய்களுக்கு பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போதே, கோரா உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் பொலிஸ்

மட்டகளப்பு, அம்பாறை, பேலியகொட, பண்டாரவலை ஆகிய பிரதேசங்களிலும் கோரா பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]