ஹட்டன் – பொகவந்தலாவ வீதி வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் மூடப்பட்டுள்ளது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிவ்வெளிகம பிரதேசத்திலே பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையினால் ஹட்டன் – பொகவந்தலாவ வீதி மூடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் காசல்ரீ நீர்த்தேக்கத்தை அண்மித்த நிவ்வெளிகம குடியிருப்பு பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டமையினால் ஐந்து குடியிருப்புகளை சேர்ந்த 25 இற்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இந் நிலையில் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியியிலும் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்மையினால் குறித்த வீதி மூற்றாக மூடப்பட்டுள்ளது.

பாதை மூடப்பட்டமையினால் ஹட்டன், பலாங்கொடை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, ஒல்ட்டன் சாமிமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகள் மஸ்கெலியா ஊடாக நோட்டன் பாதையையும், சாஞ்சிமலை வழியாக டிக்கோயா பாதையையும் போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]