ஹட்டன் பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு

ஹட்டன் பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு 

ஹட்டன் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – டன்பார் பகுதியில் உள்ள பூந்தோட்டமொன்றில் இருந்து இவை நேற்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரம் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஹட்டன் பகுதியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]