ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் தோட்ட பகுதியில் இருந்து பத்தனை மவுன்டவோனன் தோட்ட பகுதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றில் வீதியை கடக்க முயன்ற ஒருவர் மோதி உயிர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நபரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொருவர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (03) காலை 08.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

47 வயதுடைய கொட்டகலை பாத்திபுர பகுதியை சேர்ந்த சுனில் ஜயவர்தன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அதிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]