ஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்

ஹட்டன் நகரில் போதையேற்றும் பாணி மருந்தை அனுமதியின்றி விற்றவர் சிக்கினார்

ஹட்டன் நகரில் ஔடதங்கள் வர்த்தக நிலையத்தில் மருத்துவர்களின் அனுமதியை பெறாது இருமலுக்கான பாணி மருந்தை விநியோகித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பாணி மருந்து போதை ஏற்படக்கூடிய தன்மையை கொண்டுள்ளது என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மருந்தகத்தை தலவாக்கலை அதிரடிப் படையினரும் நுவரெலிய உணவு ஔடத பரிசோதகர்களும் சுற்றிவளைத்து பரிசோதனை மேற்கொண்டனர்.

குறித்த மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக நுவரெலிய மாவட்ட உணவு ஔடத பரிசோதகர் சரத்விஜேதுங்க தெரிவித்தார்.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]