ஹட்டன் தொடரூந்து நிலையத்தை, காணொளி பதிவு செய்த இளைஞன் கைது

ஹட்டன் தொடரூந்து நிலையத்தை, காணொளி பதிவு செய்த இளைஞன் கைது

சட்டவிரோதமாக ஹட்டன் தொடரூந்து நிலையத்தை காணொளி பதிவு செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் தொடர்பில் சந்தேகம் அடைந்த தொடரூந்து நிலைய அதிகாரிகள் அவரை விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளைஞன் தம்மை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தி கொண்டதாக ஹட்டன் தொடரூந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் அதனை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை எதனையும் அவர் தம்வசம் வைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தொடரூந்து நிலைய அதிகாரிகள் இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]