‘ஹட்டன் – டிக்கோய நகரசபை’யின் புதிய தலைவராக பாலசந்திரன் தெரிவு

ஹட்டன் - டிக்கோய நகரசபை

‘ஹட்டன் – டிக்கோய நகரசபை’யின் புதிய தலைவராக சடயன் பாலசந்திரன், திருவுளச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைவருக்கான வாக்கெடுப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடயன் பாலசந்திரனுக்கு 8 வாக்குகள் கிடைத்துள்ளன.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் போட்டியிட்ட அழகுமுத்து நந்தகுமாருக்கு 8 வாக்குகள் கிடைத்தன.

பின்னர், சபையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இறுதியில் இரு உறுப்பினர்களும் சமமான வாக்குகளை பெற்றிருப்பதால் திருவுளச்சீட்டின் மூலம் சடயன் பாலசந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]