ஹட்டன், டிக்கோயா நகரின் குப்பை பிரச்சினைக்கு ஒருமாதகாலத்தில் தீர்வு

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இனங்காணப்பட்டுள்ள புதிய இடத்தை ஒருமாத காலபகுதிகளுக்குள் பெற்றுத்தருவதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஹட்டன் நகரசபைக்குட்பட்ட பகுதிகள் கழிவுகளால் நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதல் ஹட்டன் பொலிஸ் மற்றும் டிக்கோயா நகரசபை அதிகாராகளுடன் நேற்று ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை ஹட்டன் குடாகம பகுதியில் கொட்டிவந்த நிலையில் குடாகம பிரதேச மக்கள் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இந் நிலையில், குப்பைகளை கொட்டுவதற்கு மாற்று இடம் இல்லாத நிலையில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகள் நிறைந்துக்காணப்படுகின்றது.

ஹட்டன் டிக்கோயா

நகர மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே அமைச்சர் பி.திகாம்பரம் திடீர் விடயத்தை மேற்கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கையெடுத்துள்ளார்.
கலந்துரையாடலின் போது, நகர மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்க முடியாது.

உடனடியாக நகரில் உள்ள குப்பைகளை அகற்ற நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நகரசபை வளாகத்தில் அல்லது பொலிஸ் நிலையத்தில் நாளை முதல் குப்பைகளைப் கொட்டவேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சர் திகாம்பரம் எச்சரித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]