ஹட்டனில் 48 வயதுடைய நபர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்பு!!

ஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவில் நேற்றிரவு காணாமல்போன 48 வயதுடைய ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் ஆற்றிருக்கு அருகாமையில் உள்ள கால்வாயிலிருந்து இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சடலம் டிக்கோயா தோட்டம் டிக்கோயா பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராமசாமி சிவாநாதன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கால்வாயில் சடலமொன்று இருப்பதாக பிரதேச மக்களினால் காவற்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த ஹட்டன் காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஹட்டன் நகரப்பகுதிக்கு நேற்றிரவு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இன்று காலை வரை வராதமையினால் உறவினர்களும், பிரதேவாசிகளும் தேடியுள்ளனர்.

இதனையடுத்து இவர் இவ்வாறு கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

இது கொலையா? அல்லது தற்கொலையா? என பலகோணங்களில் தலவாக்கலை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]