ஹட்டனில் 200 ஏக்கர் காணியில் தீ

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் ஆரம்ப்பிரிவு பாடசாலைக்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளருமான ஆறுமகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200ஏக்கர் காணி, இனந்தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. தீ பரவிய நிலையில், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தேயிலையும் மானாவும் கானபட்ட பகுதிக்கே தீகைபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]