ஹட்டனில் தீ விபத்து

ஹட்டன் மல்லியப்பு பிரதேச பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட இரண்டு வீடுகளிலும் வசித்த 08 பேர், தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், சமையல் எரிவாயு கசிந்ததன் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், தீ விபத்தையடுத்து அருகிலுள்ளவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அதனையடுத்து பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.