ஹட்டனில் காட்டுத்தீ

காட்டுத்தீ ஹட்டன் – பழைய கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் சுமார் 15ஏக்கர் நிலபரப்பு எரிந்து சாம்பராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை 04.30 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறித்த காட்டுக்கு தீ வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த காட்டுப்பகுதிக்கு தீ வைத்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.