ஹட்டனில் கடும் மழை

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் நேற்று பிற்பகல் கடும் மழை பெய்தது.

கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், ஹட்டன் நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கியுள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ள நிலையில், நீர் விதியூடாக வெளியேறி வீபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

.ஹட்டன் -கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதுடன், வீதி வழுக்கும் தன்மையாக உள்ளதால், வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களில் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]