ஹட்டனில் ‘கஞ்சா’வுடன் ஒருவர் கைது

கஞ்சா

ஹட்டன் குடாகம பகுதியில் 63 கிராம் கேரளா ‘கஞ்சா’வுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று காலை 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குடாகம பகுதியை சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் நீண்ட காலமாக மற்றுமொருவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]