முகப்பு News Local News ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் திடீர் மாற்றம்

ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறையில் திடீர் மாற்றம்

முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை விடுமுறையில் திடீர் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் 2018ஆம் ஆண்டின் 2ஆம் தவணைக்கான விடுமுறை, எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படவிருந்தது. அதற்குப் பதிலாக குறித்த தினத்துக்கு முன்னராகவே, இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டு, 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றன.

எனவே 20ஆம் திகதிக்கு பதிலாக செப்டெம்பர் 01ஆம் திகதி சனிக்கிழமையன்று பாடசாலைகள் இடம்பெறுமென, கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள், தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளைக் எதிர்வரும் 22ஆம் திகதி கொண்டாடவுள்ளதை அடுத்து 2ஆம் தவணை விடுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் விடுமுறைகளை முன்கூட்டியே வழங்குவதற்கு ஆவண செய்யவேண்டுமென, அஞ்சல் சேவைகள் மற்றும் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கல்வியமைச்சின் செயலாளரிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com