தெலுங்கில் தொடர்ந்து  6 வெற்றி படங்களையும், கடந்த  2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த ஸ்ருதி ஹாசன், தற்போது   தமிழிலும் – தெலுங்கிலும்  இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, வர்த்தக உலகின் நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் ‘கட்டமராயுடு’ திரைப்படம் மேலும் பெருமையை சேர்த்துள்ளது.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

இதை பற்றி திரையுலக  வர்த்தக துறையில் இருக்கும் நிபுணர்  ஒருவர் கூறுகையில்:

“வர்த்தக உலகில் தனக்கென ஒரு வலுவான  அடையாளத்தை பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், கட்டமராயுடு படம் மூலம் தொடர்ந்து தெலுங்கில் ஆறு வெற்றி படங்களை  கொடுத்து இருக்கும்  கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் – தெலுங்கில் வெளியான ‘சிங்கம் 3’ திரைப்படம் மூலம் இந்த 2017 ஆம் ஆண்டை வெற்றியுடனே துவங்கி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.  ‘கபார் சிங்’ படத்திற்கு பிறகு, பவன் கல்யாண் – ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான இரண்டாவது வெற்றி திரைப்படம் இந்த ‘கட்டமராயுடு’. வர்த்தக உலகில் நிலையான வெற்றியை தழுவி வருவது மட்டுமின்றி, அவருடைய நடிப்பிற்கும், நடனத்திற்கும், ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதனால் தான் அவர் தென் இந்திய திரையுலகின் வெற்றி நாயகியாக திகழ்கின்றார்.  மேலும் ஹிந்தி திரையுலகில் நிலையாக அவர் கால் பதித்து இருப்பதால், அவருடைய தென் இந்திய மொழி திரைப்படங்கள்  வட மாநிலங்களில் நல்ல வரவேற்பையும், அதே போல் அவருடைய இந்தி படங்கள் தென் மாநிலங்களில்  அமோக வரவேற்பையும்  பெற்று வருகிறது. இத்தகைய தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் ஸ்ருதி ஹாசனின் அடுத்த திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் எதிரிபார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘சங்கமித்ரா’. நிச்சயமாக அவர், அவருக்கும், திரையுலகிற்கும் புதியதொரு சாதனையை பெற்று தர தயாராக இருக்கிறார் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இதன் மூலம் இந்தி திரைப்படங்களிலும், தென் இந்திய மொழி திரைப்படங்களிலும் அவர் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள், மேலும் வலு பெற்றதாக இருக்க கூடும் என்று எதிர்பாக்கின்றோம். தொடர்ந்து வெற்றி வாகையை சூடி வரும் ஸ்ருதி ஹாசனின் மாபெரும் வெற்றியை கொண்டாடுவதில் நாங்கள்  அளவுகடந்த மகிழ்ச்சி கொள்கின்றோம்”.

ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]