ஸ்ரீ ல.மு.கா. இன் வேட்பு மனு நிராகரிப்பு

ஸ்ரீ ல.மு.கா. இன் வேட்பு மனு நிராகரிப்பு

ஸ்ரீ ல.மு.காமாத்தறை மாவட்டம், வெலிகம நகர சபைக்காக ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெலிகம நகர சபைக்காக ஸ்ரீ ல.மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 353 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. இது விகிதாசாரத்தில் 3.1 ஆகும். இச்சபையில் ஸ்ரீ ல.மு.கா. சார்பில் எவரும் உறுப்பினராக தெரிவாக வில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு 7 ஆசனங்களும், ஐ.தே.கட்சிக்கு 3 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]