ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய பிரபலம்- அதிர்ச்சியில் திரையுலகம்- அட அவர் இவர்தானா??

கடந்த சில மாதங்களாக சினிமா உலக கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் தெலுங்கு நடிகை ஶ்ரீ ரெட்டி. இயக்குநர் சேகர் கம்முலா, திரைக்கதை எழுத்தாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டகுபதி, பிரபாஸ், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்துப் படம் எடுத்த பிரபல இயக்குநர் கொரடலா சிவா, நடிகர் நானி என அவர் லிஸ்ட் நீள்கிறது…

தெலுங்கு தேசத்தை அதிர வைத்து ஶ்ரீ ரெட்டிக்கு போரடித்து விட்டது போல, அதனால் அங்கு சிறிது இடைவெளி விட்டு விட்டு, தமிழ் சினிமா மீது தனது கவனத்தை செலுத்தியிருக்கிறார்.

தனது லிஸ்டில் கோலிவுட் இயக்குநர் ஒருவரும் இருக்கிறார். அவரைப் பற்றி விரைவில் வெளியிடுவேன் என்று சொல்லியிருந்த ஶ்ரீ ரெட்டி நேற்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸைப் பற்றி தனது முகநூலில் தெரிவித்தார். ‘எனக்கு ஒரு ரோல் தருவதாக சொன்னீர்கள், ஆனால் எதுவும் தரவில்லை’ எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இப்போது நடிகர் ஶ்ரீகாந்தின் படத்தை வெளியிட்டு, ‘5 வருடத்திற்கு முன் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் பார்ட்டி ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கிளப்பில் நாம் இருவரும் ஒன்றாக நடனம் ஆடும் போது எனக்கு ஒரு ரோல் தருவதாக சொன்னீர்களே, நினைவு இருக்கிறதா’ எனக் குறிப்பிட்டு #Tamilleaks என்ற ஹேஷ் டேக்கில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார்.

பப்ளிசிட்டியை உருவாக்கும் நோக்கத்தில் சில பிரபலமானவர்களின் பெயரை நெகட்டிவாக ஶ்ரீ ரெட்டி பயன்படுத்திக் கொள்கிறார் என பலர் கூறுகின்றனர். அவர்கள் நடிக்க சான்ஸ் தருவதாக சொன்னால் உடனே நம்பி, ஶ்ரீ ரெட்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இவர்கள் சான்ஸ் தராததால் இப்போது வெளியில் சொல்லி அவமானப்படுத்தும் அவர், ஒருவேளை வாய்ப்பு கிடைத்திருந்தால் இதை செய்திருப்பாரா? தனி மனித ஒழுக்கத்தை விடுத்து, தெரிந்தே தவறு செய்து விட்டு, இப்போது அவர்கள் மேல் மட்டும் தவறு இருப்பதாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம் என்பது சில சினிமா ரசிகர்களின் கருத்து.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]l.com