ஸ்ரீ லீக்ஸில் சிக்கிய முக்கிய புள்ளியால் அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு திரையுலக நடிகையான ஸ்ரீ ரெட்டி வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றியவர்கள் பற்றிய லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறார்.

இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதனால் தமிழ் திரையுலகமும் அடுத்த யார் பெயர் வெளியாகுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முதலில் வெளியிடப்பட்ட பெயர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடையதாகும்.

இவர் தற்போது தளபதி விஜையை வைத்து சர்கார் எனும் திரைப்படத்தினை உருவாக்கி வருகின்றார்.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை இத் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஸ்ரீ லீக்ஸ்ஸில் முருகதாஸ் சிக்கியுள்ளார்.

இதனால் அவர் மீது எதிர்மறையான கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் வெளியாகும் சர்கார் படத்திற்கான வியாபாரமும் பாதிக்க வாய்ப்புள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தளபதி விஜயின் திரைப்படம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இது ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]