ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேதின கூட்டத்தை எதிர்த்து மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மேதின கூட்டத்தை மட்டக்களப்பு மாவடிவேம்பில் நடாத்துவத்ற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திங்கட்கிழமை (07) பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே தினக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அன்டிய பகுதியில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எமது வேதனையை உணராது எமக்கான நீதியை பெற்றுத்தராது தாங்களும் கட்சியும் இணைந்து எங்கள் பிரதேசத்திலேயே மே தினத்தை மகிழ்வாக கொண்டாடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]