ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளிலும் விரைவில் மாற்றம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் சகல பதவிகளிலும் மாற்றம் ஏற்படுத்துவதற்கு சகல உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

அதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக புதிய நிர்வாகக் குழுவை அடுத்த மாதம் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி தற்காலிக புதிய நிர்வாக குழு நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]