ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழு இன்று பதவி துறந்தது

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழு இன்று பதவி துறந்தது.

இந்திய அணியுடன் தற்போது இடம்பெறும் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளதால் அணிக்கு எதிராகவும் தெரிவுக்குழுவுக்கு எதிராகவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்கு பதவி விலகியுள்ளது.ஸ்ரீ லங்கா கிரிக்கட்

இது தொடர்பான கடிதத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவிடம் கிரிக்கட் தெரிவுக்குழு இன்று கையளித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய, ரஞ்சித் முனசிங்க, ரொமேஸ் கலுவித்தாரன, அசங்க குருசிங்க மற்றும் எரிக் உபசாந்த ஆகியோரே இவ்வாறு பதவிவிலகியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]