‘ஸ்ரீவித்யா’வின் வீட்டை ஏலம் எடுக்க மறுப்பு

ஸ்ரீவித்யா

தென்னிந்திய மொழிகளில் 3 தலைமுறை நடிகர்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா . இவர், தனது 53ஆவது வயதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. 1250 சதுர அடிகளை கொண்ட வீட்டில் வேறொருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ஸ்ரீவித்யாவின் தம்பி நிர்வகித்து வரும் குறித்த வீட்டில், ஸ்ரீவித்யா 45 இலட்சம் ரூபாய் வருமானபாக்கி வைத்திருந்தார்.

இதற்காக அபிராமபுர வீட்டை வருமானவரித்துறை தன் பொறுப்பில் வைத்திருந்தது. வாடகைக்கு குடியிருப்பவர் வருமானவரித்துறையிடம் வாடகை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் வருமானவரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கிக்காக வீட்டை ஏலத்தில் விட வருமானவரித்துறை முடிவு செய்தது.

குறைந்தபட்ச ஏலத்தொகையாக ஒரு கோடியே 17 இலட்சம் நிர்ணயம் செய்தது. ஏல அறிவிப்பை தொடர்ந்து பலர் ஸ்ரீவித்யாவின் வீட்டைப் பார்த்துச் சென்றனர்.

திட்டமிட்டபடி நேற்று ஏலம் விட இருந்தனர். ஆனால் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் ஏலம் விடுவது தள்ளி வைக்கப்பட்டது.

மிகவும் பழமையான வீட்டுக்கு ஒரு கோடியே 17 இலட்சம் என்பது கூடுதலான தொகை என்று வீட்டை பார்த்துச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]