ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்துகின்றனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்காளர்களை அச்சுறுத்துகிறார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இதன் மூலம் அவர் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும கூட, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெறும் உள்ளூராட்சி சபைகளுக்கு பிரதமரின் ஊடாக நிதி ஒதுக்கப்படாது என்று கூறியிருக்கிறார்.

இது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாக்காளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். அந்த வாக்குகளை ஐதேகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பெற முனைகின்றன.” என்றார்.