பொதுஜன முன்னணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால் மஹிந்த நீக்கப்படுவார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரப்புரைகளை மேற்கொண்டால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருக்கிறார். எனவே, உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவதற்கு அவர் பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அடையாளம் காணும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எவரேனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளித்தால், அவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு, கட்சியின் யாப்புக்கு அமைய, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.