ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

இதன்படி குறித்த மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இக்கூட்டத்தின் போது, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் கட்சி சம்மேளனக் கூட்டம் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகல்கள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]