ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு, ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியின் பணிகளை செய்து, 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]