ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பதவிலக பேச்சுவார்த்தை

அமைச்சு பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு சுயாதீனமாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் இறுதி தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்றைய தினத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]