ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனின் தேர்தல் விஞ்ஞாபனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

யாழ்ப்பாணம்; நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதித்துவத்திலான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

“ஓன்றிணைந்த கிராம எழுச்சி எமது இனத்தின் வளர்ச்சி” எனும் கருத்திட்டத்திலான அபிவிருத்தி திட்டத்தினை உள்ளடக்கியதாக தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.

யாழ்.மானிப்பாய் வீதியில் உள்ள பிள்ளையார் இன் விருந்தினர் விடுதியில், இன்று (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கட்டவேலி 18 ஆம் வட்டார வேட்பாளரான கந்தையா வைத்தியநாதனிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வழங்கி வெளியிட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]