முகப்பு News Local News ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சில உறுப்பினர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பில் வெளியான தகவல் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் அவர் இதனை குறிப்பிட்டார்.

இத்தகைய செயற்பாட்டுக்கு பின்னால் ஐக்கிய தேசிய கட்சியின் தேவைப்பாட்டுக்காக வேலை செய்யக்கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழுவொன்றும் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், குறித்த 16 பேரும் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டுக்கும் அழைக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com