ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் தினத்தில் சிக்கல்!

ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் எதிர்வரும் வருடம் பெப்ரவரி 7 ஆம் திகதி நடைப்பெற இருந்த நிலையில், அமைச்சரவையின் செயற்பாடுகள் நீதிமன்ற உத்தரவின் ஊடாக தடை செய்யப்பட்டுள்ளமையால் முடிவுகள் எதுவுமின்றி தேர்தல் பிற்போகும் நிலைமை உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தேர்தல் தினம் நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னதாக, வாக்குரிமை உள்ள உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் தொடர்பில் தேர்தல் குழுவிற்கு 4 எதிர்ப்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அந்த எதிர்ப்பு மனுக்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட தேர்தல் குழு, சில விளையாட்டு கழகங்களுக்கு வாக்குரிமையை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தென் மாகாண கிரிக்கட் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களின் தேர்தல் குழுவின் தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு மேன்முறையீட்டை தாக்கல் செய்துள்ளன.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவிக்கு நீதிமன்ற உத்தரவின் ஊடாக தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தலுக்கு முன்னதாக பெயர்ப்பட்டியலை அழைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]