ஸ்ரீலங்கன் விமான சேவையின் முக்கிய அறிவிப்பு

4 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு பயணிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகளை அடுத்து, பயணிகளிடம் இந்த இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருவதால், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்த்து கொள்ள முடியும் என, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]