ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கு புதிய அங்கீகாரம்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கு புதிய அங்கீகாரம்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸிற்கு புதிய அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதன்படி உலகிலேயே நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கும் விமானம் என்ற பெயரை ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பெற்றுள்ளது.

இது குறித்து Xinhua செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கைகுச் சொந்தமான ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானங்கள் 91.37 சதவீதம் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் உலகிலேயே நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பது தெரியவந்துள்ள நிலையில், இந்த அங்கீகாரம் கிடைக்கபெற்றுள்ளது.

இதற்காக பிளைட் ஸ்டேட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியதாகவும், இதன்போது ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த 41 விமான நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]