ஸ்ரீதேவியின் மரணத்தால் மகள்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியும் வாழ்க்கையும்

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த ஃபிப்ரவரி மாதம் துபாயில் காலமானார். பின் மும்பையில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அவருக்கு தன் குடும்பம், மகள்களின் எதிர்காலம் மீது கொஞ்சம் கவலையும் இருந்துள்ளது. அதே நேரத்தில் கணவர் போனி கபூரின் மகன் அர்ஜீன் கபூரிடம் தனக்கு மரியாதை கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் இருவரது குடும்பமும் ஒன்று சேர்ந்தது. அர்ஜூன் ஸ்ரீதேவி மகள்கள் மீது தனக்கு பாசம் உண்டு என அவர் கூறினார். மேலும் அவர் குடும்ப பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.இந்நிலையில் அவர் தன் தந்தை போனி கபூர், சித்தி ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி என மூவரையும் விருந்திற்கு அழைத்திருக்கிறாராம்.

இதற்காக அவர் ஷூட்டிங்கை தள்ளி வைத்து விட்டு மும்பை வந்திருக்கிறாராம்.ஏற்கனவே போனி கபூரின் மகள் ஜான்வி மற்றும் குஷி என் தங்கைகள் அவர்களை யாரும் எதுவும் சொல்ல விட மாட்டேன் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலடி கொடுத்திருந்தார் இந்த நேரத்தில் அர்ஜூனின் இந்த செயற்பாட்டால் மகிழ்ச்சியில் உள்ளனர் குடும்பத்தினர்.

ஸ்ரீதேவியின் மரணம்இத்தனை மாற்றங்களை நிகழ்த்தும் என யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் தாய் மரணித்து மகள்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]