சிங்கப்பூரில் ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட பொம்மை!

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் கடந்தாண்டு வைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட பொம்மையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

துபாயில் நடிகர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் சென்றார் ஸ்ரீதேவி. அங்குள்ள ஹோட்டல் அறையில் உள்ள கழிவறை பாத்டப்பில் மூழ்கி இறந்துவிட்டார்.

அவரது அஸ்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு 16-ம் நாள் சடங்கு நடத்தப்பட்டது. இந்த சடங்கில் நடிகர் சிவக்குமார், கார்த்தி, சூர்யா, ராதிகா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் விஜய், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்பட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா சினிமாவைத் தொடர்ந்து வெளிநாட்டு ரசிகர்களும் ஸ்ரீதேவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களிலும், அவரது திரையுலக சாதனையை பாராட்டியும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில், கடந்தாண்டு ஸ்ரீதேவியின் உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டுப்புடவை, நகைகள் அணிவித்து வைத்துள்ளனர். ஸ்ரீதேவியின் உருவம் கொண்ட இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]